Posts

Showing posts from September, 2019

பகுதி -25

பகுதி -25 பாபா சொன்னால் சொன்னபடி நடக்குமே? சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, பக்தர் ஆவலோடு காத்திருந்தார். தெய்வத்தின் திட்டங்கள்தான் எத்தனை ஆச்சரியமானவை! ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தாய்ப்பாசம் இருக்கிறது. தாய்ப்பால் கொடுத்துக் குழந்தையைத் தாய் வளர்ப்பதும், இயல்பாகவே அவளிடம் தோன்றும் அளவற்ற பாசத்தால்தான். தாயின் பெருமையை அறிவுபூர்வமாக உணர்ந்து அவளை அவளது வயோதிக காலத்தில் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை. தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் கொண்டு தள்ளுபவர்கள் அந்தப் பெரும் பாக்கியத்தை இழக்கிறார்கள். பிராயச்சித்தமே இல்லாத மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். விலங்குகளிடமும் பறவைகளிடமும் இயற்கை தேவையான நேரத்தில் மட்டும் தாய்ப்பாசத்தை உண்டு பண்ணுகிறது. எப்பேர்ப்பட்ட விந்தை அது! ஐந்தறிவே உள்ள அவற்றிடம் அப்படியொரு பாசம் தோன்றுவது எத்தனை ஆச்சரியம்! ஒரு தாய்க்கோழி தான் இட்ட முட்டையை எந்தக் கட்டளைக்குப் பணிந்து தொடர்ந்து அடை காக்கிறது? முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், எதிரிகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வீர உணர்ச்சியைத் தாய்க்கோழியின் மனத்தில் புகட்டியவர் ய...

பகுதி -24

பகுதி -24 காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு கெட்ட குணங்களையே பாபா தட்சிணையாகக் கேட்கிறார். பணத்தை அல்ல! உன்னிடம் பணம் இல்லையே என்று கவலைப்படாதே. இந்த ஆறு குணங்களை தட்சிணையாக பாபாவுக்குக் கொடுத்துவிடு. பின் அந்தக் கெட்ட குணங்கள் நிரந்தரமாக உன்னை விட்டுப் போய்விடும்! இந்த விளக்கத்தைக் கேட்ட பாபா, தட்கட்டின் கணவர் சொன்னதே சரி எனத் தலையாட்டினார். தட்கட்டின் விழிகளில் கண்ணீர்! பாபாவின் பாதங்களில் தனது ஆறு கெட்ட குணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக அவள் நெகிழ்ச்சியுடன் அறிவித்தாள். பாபாவைப் பூரண நம்பிக்கையுடன் நமஸ்கரித்து எழுந்தாள். பின் அவள் வாழ்க்கை ஆனந்தமயமாக அமைந்தது என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? பேராசையே பெரும்பாலானவர்களின் வாழ்வில் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை பாபா அறிந்து வைத்திருந்தார். பேராசையை இயன்றவரை குறைப்பதன் பொருட்டே பக்தர்களிடம் பணத்தைக் காணிக்கையாக அதட்டிப் பெற்றார். ஆனால், பல நல்ல மனிதர்களிடம் பணமல்லாததைக் காணிக்கையாகக் கேட்டுப் பெற்று அவர்களை மேலும் நல்லவர்களாக்கும் வித்தையும் பாபாவுக்குத் தெரியும். தமது அடியவரான பேராசிரியர் நார்கேயிடம் பதினைந்து ...

பகுதி -23

பகுதி -23 தெய்வமேயான அவருக்கு அகில உலகமும் உரிமை உடையது என்கிறபோது, அனைவரின் பணமும் அவருடையதுதானே! சூரியனைக் கற்பூர ஆரத்தியால் வழிபடுவது மாதிரி தான் இதுவும். நம் பணமெல்லாம் பாபா கொடுத்த செல்வம்தான். அதில் ஏதோ கொஞ்சம் பணத்தை என்ன காரணத்திற்காகவோ தமக்குக் காணிக்கையாக பாபா உரிமையுடன் கேட்கிறார் என்பதை அடியவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்வதுபோல், பாபா பணத்தில் கொஞ்சத்தைக் கிள்ளி அவருக்கே காணிக்கையாக்கினார்கள். திருவண்ணாமலை மகான் சேஷாத்ரி சுவாமிகள், எந்தக் கடைக்குச் சென்று பொருட்களை வாரி இறைத்தாலும், அந்தக் கடையில் அன்று வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பார்களே? அதன்பொருட்டு கடைக்காரர்கள் சேஷாத்ரி சுவாமி தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று காத்திருப்பார்களாமே? அதுபோல் பாபா தங்களிடம் காணிக்கை கேட்க மாட்டாரா என்று அடியவர்களும் காத்திருந்தார்கள். அவர் காணிக்கை கேட்டு அதைக் கொடுத்துவிட்டால், தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பினார்கள். இல்லாவிட்டாலும் தங்களுக்கு நிகழவிருந்த ஒரு கெடுதலை பாபா தங்களிடம் காணிக்கை வாங்கிக் கொண்டதன் மூலம் நீக்குக...

பகுதி -22

பகுதி -22 மீதித்தொகை ரகசியத்தை அறியும் முன், வாடியா பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்து விடுவோம்.நாந்தேட் கிராமத்தில் வசித்தவர், பார்சி மில் காண்டிராக்டர் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா. எல்லாச் செல்வங்களும் இருந்தன, ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அதுதான் மக்கட்செல்வம். தமக்கு ஒரு குழந்தையில்லையே என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவர் முழுமையான மகிழ்ச்சியோடு இருக்கக் கூடாது என்பது இயற்கையின் திட்டம்போலும். அவரை மக்கள் பெரிதும் மதித்தனர். காரணம் அவர் தர்மசீலர். ஏழை எளியவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்துவந்தார். ஆனால், தமக்கு ஒரு குழந்தையில்லாதது குறித்து அந்தரங்கமாக அவர் பெரிதும் வருந்தி வருகிறார் என்பதை மக்கள் அறியவில்லை.  நாட்கள் செல்லச் செல்ல அல்லும் பகலும்அவரை இந்தச் சிந்தனைதான் ஆக்கிரமித்துத் துன்புறுத்தியது. பணி செய்துகொண்டே இருப்பார். திடீரெனத் தமக்குப் பின் தம் தான தர்மங்களைத் தொடர,  வாரிசு இல்லையே என்ற உண்மை நினைவு வரும். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்படும். அப்படியான ஒரு தருணத்தில் அவரது உற்ற நண்பரான தாஸ்கணு, ஏன் இந்தப் பெருமூச்சு? என அன்ப...

பகுதி -21

பகுதி -21 கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதும், அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும்தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. பாபாவின் லீலைகள் பல்லாயிரம். அவற்றின் சூட்சுமம் அறிந்தவர் யார்? கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்தார். அன்று காலை சமைத்த உணவின் மீதி. இது இப்போது தன் கண்ணில் மீண்டும் மீண்டும் படுவானேன்? பாபாதான் இக்காட்சியைத் தனக்குக் காட்டுகிறாரோ? உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று, பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய...

பகுதி 20

பகுதி 20 இந்த மருத்துவர் அப்படி ஓடியதற்கு காரணம் உண்டு. சாயி அமர்ந்திருந்த இடத்தில் புன்முறுவலுடன் அமர்ந்திருப்பது யார்? தசரத குமாரனான ராமன் அல்லவா? கையில் வில்லோடும், தலையில் ஒளிவீசும் மகுடத்தோடும், சித்திரத்தில் அலர்ந்த  செந்தாமரை போன்ற முகத்தோடு காட்சி தருகிறானே என் ராமன்? ராமா! எங்கெங்கோ உன்னைத் தேடினேன். கடைசியில் இங்கேயா இருக்கிறாய்? பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நடந்த உன் பாதங்கள் நொந்திருக்குமே அப்பா? நான் பிடித்து விடவா? மருத்துவர் சடாரென்று பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார். சரணாகதி தத்துவத்தை நிலை நிறுத்தியவன் அல்லவோ ராமன்? வேடன் குகனானாலும், குரங்கு சுக்ரீவன் ஆனாலும், அரக்கன் விபீஷணன் ஆனாலும் தன் பாதங்களில் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளல் அல்லவா அவன்! காகத்திற்கும் அடைக்கலம் தந்த காகுத்தன். அணிலின் முதுகைப் பரிவோடு தடவி அருள்புரிந்த அண்ணல். உன் பாதங்களில் சரணடைந்த என்னையும் காத்தருள் என் தெய்வமே….! இப்படி நினைத்தவாறே நிமிர்ந்து பார்த்த மருத்துவர் திடுக்கிட்டார். சடாரென்று தன் கைகளை உதறினார். அங்கே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தது பாபா தான். ராமனல...

பகுதி -19

பகுதி -19 பாவின் உருவம் காற்றில் கரைந்து மறைந்தது. பாபாவுக்கு பதிலாக, பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில், சாஸ்திரியின் குருவான அமரர் கோலப் ஸ்வாமியின் திருவுருவம் திடீரென்று தோன்றியது! கோலப் ஸ்வாமி எப்போதும் குங்குமப் பூ நிற உடை அணிவது வழக்கம். இப்போதும் அதே குங்கும வர்ண உடையில் தோன்றினார் அவர். பாபா ஏற்கனவே அணிந்திருந்த குங்குமப்பூ நிற உடை இப்போது கோலப் ஸ்வாமிக்கு என்னமாய்ப் பொருந்துகிறது! குங்குமப் பூ வண்ணத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பதன் சூட்சுமம் இப்போதல்லவா புரிகிறது! சாஸ்திரியின் கண்களில் அருவிபோல் கண்ணீர்! ஆகா! என் குரு கோலப் ஸ்வாமி அமரராகி விட்டார் என்று வருந்தினேனே! அவர் ஸித்தி அடையவில்லை. பாபா வடிவில் உரு மாறியிருக்கிறார். அவ்வளவுதான். இதை  இத்தனை காலம் புரிந்து கொள்ளாமல் போனேனே? இதோ! நானும் பாபாவும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் தன் முந்தைய வடிவிலேயே காட்சி தருகிறாரே என் குரு! மெய்மறந்து நின்ற சாஸ்திரி, பாபாவைப் பார்த்துப் படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டார். நகைத்தவாறே, சாஸ்திரி அருகில் வந்தார் பாபா. இப்போது எனக்கு தட்சணை தருவதில் ஆட்சேபணை ...

பகுதி -18

பகுதி -18 அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்பனே! வந்தாயா? என்று கட்டியணைத்துக் கொண்டார். என் கடிதம் கிடைத்ததா? என்று கேட்டார். எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! என்றார் காகா. உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. காரணம் இதுதான். அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டார்.  நிர்வாகத்தில் பெரும் சிக்கல். மானேஜர் செய்துவந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. முழுமனதோடு அந்தப் பணியைச் செய்தார். நிரந்தர மானேஜர் செய்த பணி நேர்த்தியை விட, தற்காலிக மானேஜர் செய்த பணியின் நேர்த்தி மேலும் சிறப்பாக இருந்தது!இடர்ப்பாடு ஏற்பட்ட காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வு தரப்பட்டது. பாபாவின் அருளால் கிட்டிய பதவி உயர்வு என நெகிழ்ந்தது காகாவின் உள்ளம். அலுவலகத்திலிருந்து காகாவை உடனே மும்பை திரும்புமாறு, முதலாளி ஷிர்டிக்கு அனுப்பிய கடிதம், இரண...

பகுதி -17

பகுதி -17 தூணின் மீது கம்பால் ஓங்கி அடித்தார் பாபா. ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின்எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அது தன் நெருப்பு விரல்களால்,பாபாவைக் கைகூப்பி வணங்கியதுபோல் தோன்றியது!அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபாதம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றுஉணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள். தங்களைப் படைத்தவருக்குத்தான் பஞ்ச பூதங்கள் கட்டுப்படுகின்றன என்று புரிந்து கொண்டார்கள். அன்னை சீதாப்பிராட்டியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அனுமன் வாலில் அக்கினி தேவன் தன் இயல்பு மாறிக் குளிர்ச்சியாக இருந்தானே! சீதை அக்கினிப் பிரவேசம் செய்தபோது, கற்பின்கனலியான அன்னையைச் சுடாமல், அக்கினி தேவன் பவித்திரமாக ஸ்ரீராமபிரானிடம் ஒப்படைத்தானே!கடவுளுக்கு நெருப்புகட்டுப்படும் என்பதுராமாயண காலம் தொட்டு நாம் அறிந்தது தானே! தன்னைப் படைத்த இறைவனுக்கு நெ...

பகுதி – 16

பகுதி – 16 இதோ அந்த அற்புத பதில்! நான் எவ்விதம் அதை மறுக்க முடியும்? பண்டிட், என்னை அவரது குருவானகாகாபுராணிக் என்றல்லவோ எண்ணுகிறார்? காகாபுராணிக்கிற்கு, ரகுநாத மகராஜ் என்றொரு பெயருண்டு. இப்போது, பாபா என்று இன்னொரு பெயரும் இருப்பதாக பண்டிட் கருதுகிறார். என் வடிவில் தம்குருவையே அவர் காண்கிறார். அவரது குரு பக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டுமல்லவா? எல்லா குருவாகவும் இருப்பது நான்தானே? தம் குருநாதருக்குப் பூசுவது போலவே, என் நெற்றியிலும் சந்தனம் பூசினார். அவர் என் நெற்றியில் சந்தனம் பூசும்போது நான் பாபா அல்ல. காகாபுராணிக் தான்!  இதைக் கேட்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.பின்னர் பண்டிட்டிடம் அதுபற்றி விசாரித்தார்கள். பண்டிட்இருகரம் கூப்பி பாபாசொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டார். மனிதர்களின் மன ஆழத்தில் ஓடும் எண்ணஓட்டங்களை உள்ளது உள்ளவாறே கண்டறிவதில் பாபாவுக்கிருந்த அபாரமானஆற்றலை எண்ணி எல்லோரும் அதிசயித்தார்கள். அதேநேரம், இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைசக்தியாக உள்ளிருந்து எல்லோர் எண்ணங்களையும் கண்காணித்துக்கொண்டிருப்பவர் பாபாதானே! என்ற உண்மையையும் சிலர் வெள...

பகுதி – 15

பகுதி – 15 பாபா சற்றுநேரம், அந்த இளைஞனைக்கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். தந்தையைக் குழந்தை அதட்டுவது மாதிரி அவருக்குத்தோன்றியிருக்க வேண்டும். தயக்கமே இல்லாமல் தன்இருக்கையிலிருந்து எழுந்தார். நானாவலியைஅதில் அமர்த்தினார்.சிறிதுநேரம் பாபாவின் இருக்கையில் அமர்ந்திருந்த நானாவலி, பிறகு இருக்கையை விட்டு எழுந்தான். பாபாவை மீண்டும் அவரது இருக்கையில் அமருமாறு வேண்டினான். பிறகு, பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்!தம் ஆசனத்தில் மறுபடி அமர்ந்துகொண்ட பாபா,கடகடவென்று நகைத்தார்.கூடியிருந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சி எதை உணர்த்துகிறது என்று மனத்தில் ஆராய்ந்தார்கள். பாபாவின் லீலைகள்ஒவ்வொன்றுக்கும் ஓர்உட்பொருள் இருக்குமே? மனிதர்கள் தங்கள் பதவி ஆசை, நாற்காலி ஆசை போன்றவற்றை எந்நேரத்திலும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்த்துகிறாரா? தம் பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தாம்எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரத் தயார் என்று அறிவிக்கிறாரா?எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும்பக்தர்களுக்குப் புரிந்தது. ஆன்மிகவாதிகளில், சிலர்செல்வச் செருக்கோடும் அகங்காரத்தோ...

பகுதி – 14

பகுதி – 14 ஆம்…அந்த சமயத்தில்,ஷிர்டி மசூதியில் பாபாவைதரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றார். ஏன் இவர்இப்படி ஆவேசப்படுகிறார் என்று பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபாதன் கைகளையும், கால்களையும் யாரோடோ சண்டையிடுவது போல் காற்றில் வீசத்தொடங்கினார். எதன்பொருட்டு இது நடக்கிறது?பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாபா உக்கிரத்தோடு காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோவைப் பழமாய்ச்சிவந்திருந்தன. முகம் குங்குமப்பூப்போல் சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. திருடர்கள் முன் பயத்தோடுநின்றுகொண்டிருந்த காஷிராமின் உடலில் ஒரு கணம் ஆவேசம்வந்தது போல் தோன்றியது. தன் கையில் பற்றிக் கொண்டிருந்த பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார்.தன் கைகளாலும், கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத்தாக்கத் தொடங்கினார்.அவரோ அதிக பலமில்லாத நோஞ்சான். ஒரே ஒருவர் தான் அவர். திருடர்கள் பலசாலிகள். அவர்கள் எண்ணிக்கையில் நான்கைந்து பேர்!ஆனால், காஷிராமின் உடலில் தென்பட்ட அசாத்தியமான வலிமையை...

பகுதி – 13

பகுதி – 13 நீதிபதியின் தலைசுற்றிய காரணத்தைக் கேட்டால், நமக்கும் தலை சுற்றும். காரணம், ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்ன பாபா, தாவி ஏறி, ஒரு நூலில் படுத்துக் கொண்டு ஆனந்தமாக உறங்கலானார். ஒரு மனிதர் தரையில் படுக்கலாம். பாயில் படுக்கலாம். கட்டிலில் படுக்கலாம். ஆனால், ஒரு மெல்லிய நூலில் எப்படிப் படுக்க முடியும்? நீதிபதிக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை.ஆனால், நம்ப முடியாததைஎல்லாம் நிகழ்த்திக் காட்டுவதுதானே பாபாவின் மகிமை!ஒரு நூலில் படுக்குமளவு, தம்மை எப்படி கனமே இல்லாதவராகஆக்கிக் கொண்டார்? நீதிபதிக்கு எதுவும் புரியவில்லை.கண்களில் பக்திக் கண்ணீர் பெருக, நெடுநேரம் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, பாபாவைக் கீழே விழுந்து வணங்கி மனத்தில் அவரைபூஜித்தவாறே இல்லம் திரும்பினார்.பாரததேசம்சுதந்திரம் அடைவதற்கு முன், ஷிர்டியில்தரிசனம் தந்த பாபாவை, திலகர்உள்ளிட்டசுதந்திரத் தியாகிகள்பலரும் சென்றுசந்தித்திருக்கிறார்கள். நாட்டு மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்களில் மிக முக்கியமானவர் அல்லவா லோகமான்ய பால கங்காதர திலகர்! இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் விநாயகரை வழிபடுவதால், விநாயகர்வழிபாட...

பகுதி – 12

பகுதி – 12 ஆனால், அடுத்த கணம்தான் மாதவராவுக்கும் சரி… கூடியிருந்த மக்களுக்கும் சரி… பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. உண்மையில் பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  என்னும்போது விஷம் என்ன பிரமாதம்? அதுவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் ஏறிக்கொண்டிருந்த விஷம் சரசரவென இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்ற மாதவராவ், என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார். அடியவர்களைக்  காக்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்! என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம...

பகுதி – 11

பகுதி – 11 திருடன், தான் திருடிய வைர நகைகளெல்லாம் பாபாவுடையது என்று கூறுகிறானே! என்ன செய்வது இப்போது? பாபாவின் மகிமைகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நீதிபதி சற்றுத் தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்:பாபா! திருடன் திருடிய நகைகளெல்லாம் உங்களுடைய வைதானா? திருடன் அப்படித்தான் சொல்கிறான்! நீதிபதி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, பாபா கலகலவென்று நகைத்தார். என்ன மனோகரமான சிரிப்பு! மக்களும் நீதிபதியும் அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மயங்கினார்கள். பாபா பேசலானார்:ஆம் நீதிபதி அவர்களே! திருடன் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். அவன் வைத்திருக்கும் நகைகள் அத்தனையும் என்னுடையவைதான்! பாபாவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். திருடனும் திகைப்பில் ஆழ்ந்தான். அவனுக்குத் தெரியுமே அந்த நகைகள் பாபாவுடையது இல்லை என்று! தப்பிக்கத் தானே அவன் பொய் சொன்னான்? ஆனால், பாபா திருட்டு நகைகள் தம்முடையவை என்கிறாரே? பாபா தொடர்ந்து பேசலானார்:இவன் திருடிய நகைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள தங்கம் வெள்ளி வைரம் வைடூர்யம் எல்லாமே என்னுடையவைதான். ஏன், இந்த ஊர், இந்த நதி, இந்தக் காற்று, கூடியிருக்கும் மக்கள், ஆகாயத்தில் ...

பகுதி – 10

பகுதி – 10 பாபா பேச ஆரம்பித்தார்.  நாம் எல்லோரும் இப்போது பஜனை செய்வோம். அதோ என் மனக்கண்ணால் நான் பார்க்கிறேன். என் அடியவனுக்காகப் பண்டரிபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன! பண்டரிநாதன் என் கண்முன் தோன்றுகிறான்! இப்படிச் சொன்ன பாபா, நான் பண்டரிபுரம் போகவேண்டும், அங்கே தங்க வேண்டும். ஏனெனில், அதுவல்லவோ என் பரமனின் வீடு! அங்கேயல்லவோ நான் வாழவேண்டும்! என்று சப்தம் போட்டுப் பாடலானார். அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வந்த சாந்தோர்க்கர் மெய்சிலிர்த்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தமக்கு மாற்றல் உத்தரவு வந்தது பற்றி பாபா ஏற்கனவே அறிந்திருப்பதையும், அதை ஏற்கச் சொல்லியே பாபா இவ்விதம் பாடுகிறார் என்பதையும் அவர் உள்மனம் உணர்ந்துகொண்டது. கண்களில் கண்ணீர் வழிய, பண்டரிநாதன் வடிவில் பாபா தொடர்ந்து தம்மை ரட்சிக்க வேண்டும் என்று அவர் கீழே விழுந்து நமஸ்கரித்து வேண்டியபோது, பாபாவின் கரம் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தது…. ஒருமுறை ஒரு திருடன் கொஞ்சம் நகைகளைத் திருடி பிடிபட்டு விட்டான். காவல் துறையினர் அவனை உதைத்து விசாரித்தார்கள். எப்படியாவது தப்பிக்க வேண்டுமே? தான் வைத்திருந்த திருட்டு நக...

பகுதி – 9

பகுதி – 9 நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் உள்ளே வைத்தது ஏன்? பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா… நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள். தன் குழந்தை பளபளவெனப் பிரகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை.  என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால் பாதகமில்லை!. பாபாவின் விளக்கத்தைக் கேட்ட அடியவர்கள் உருகினர். எங்கோ இருக்கும் தன் பக்தையின் ...

பகுதி – 8

பகுதி – 8 சென்ற அந்தப் பிரமுகர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன் நடுக்கத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முயன்றார். ஒரு குவளை குளிர்ந்த நீரைக் குடித்தார். மெல்லத் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மசூதி நோக்கி நடந்தார். எப்படியும் நடந்த விஷயத்தை ஊரில் உள்ள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அல்லது அதற்குள் விஷயம் தெரிந்து ஊரே மசூதியில் கூடியிருக்கிறதோ என்னவோ? ஆனால், அவர் மீண்டும் தயங்கித் தயங்கி மசூதிக்குச் சென்றபோது அங்கே எந்தக் கூட்டமும் இல்லை. மசூதி வழக்கம்போல் அமைதியாகத் தான் இருந்தது. எச்சரிக்கையோடு உள்ளே சென்று பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம்! பாபா வழக்கம்போல் சலனமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்! அப்படியானால் தாம் கண்ட காட்சி பொய்யா? கனவா? தன் கண்ணே தன்னை ஏமாற்றுமா? முன்னர் பாபாவின் அங்கங்கள் சிதறிக் கிடந்ததாகத் தாம் கண்ட காட்சி தான் பிரமையா? இல்லை… இப்போது தாம் கண்டுகொண்டிருக்கும் இது பிரமையா? அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பாபாவை மீண்டும் முழுமையாக தரிசிக்க முடிந்ததில், அவர் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. பாபா! நீங்கள் இருக்கிறீர்கள்! ந...

பகுதி – 7

பகுதி – 7 பாபவின் அனுமதியின் பேரில் உருஸ் விழாவும், ராமநவமி விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட நாள் அது. இந்து பக்தர்கள் ராம ஜனனத்தை உணர்த்தும் வகையில் பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைக் கொண்டுவந்து வைத்தார்கள். ராம சரிதக் கீர்த்தனைகளைப் பாடலானார்கள். தொட்டிலையே பார்த்தவாறிருந்த பாபாவின் விழிகள் செக்கச் செவேலெனக் கனலாய்ச் சிவந்தன. அவரிடமிருந்து உலகையே நடுங்கச் செய்யும் ஒரு கம்பீரமான கர்ஜனை புறப்பட்டது…….. அண்ட பகிரண்டங்களும் அந்த கர்ஜனையைக் கேட்டு நடுநடுங்கின. பூமி நடுங்கி பூகம்பம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பக்தர்கள் திகைத்தார்கள். தாங்கள் செய்த தவறென்ன? ராம நவமி கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர் பாபா தானே? அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை கோபம்? மெல்ல மெல்லத்தான் அவர்களுக்கு விஷயம் விளங்கியது. தொட்டிலில் ராமக் குழந்தை படுத்திருப்பதாகக் கருதி, அவர்கள் பாடிய பாடல்களின் பொருள்தான் பாபாவின் சீற்றத்தைத் தூண்டியிருக்கிறது. கிருஷ்ணக் குழந்தையைப் போல் ராமக் குழந்தைக்கு பால லீலைகள் என்று அதிகம் எதுவுமில்லையே? கண்ணன் என்றால் கோகுலத்தில் அவன் நிகழ்த்திய ஏராளமான விளையாட்டுகளைப் பாடலாம். கா...